தமிழகத்தில் 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!
பண்டிகை தினத்தையொட்டி தமிழகத்தில் 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு பேருந்துகள் இயக்கம் காரணமாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 10-ம் தேதியில் இருந்து 14 ஆயிரத்து 104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் இதேபோல் பொங்கல் பண்டிகை முடிந்து பயணிகள் சென்னை திரும்ப வசதியாக 15 ஆயிரத்து 800 சிறப்பு பேருந்துகள் 15 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மாதவரத்தில் இருந்து பொன்னேரி ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகளுடன் திருச்சி சேலம் கும்பகோணம் திருவண்ணாமலை செல்லும் குறிப்பிட்ட சில பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..