மணிப்பூரில் சடலமாக இருக்கும் 118 உடல்கள்..!! உச்சநீதிமன்றத்தின் புதிய முடிவு..!!
மணிப்பூர் கலவரம் தொடர்பான விசாரணையை உச்சநீதிமன்றம் மேற்கொண்டு வரும் நிலையில் இதுவரை எத்தனை பேர் உயிர் இழந்துள்ளார்கள் கணக்கெடுத்துள்ளது. இதுவரை 118பேர் உயிர் இழந்து உள்ளதாகவும்.., அந்த 118 பேரின் உடல்கள் யார் என்று அடையாளம் காணப்படாததால் இம்பாலில் உள்ள பிணவறையில் கடந்த ஒரு மாதமாக பிணங்கள் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
இவர்களை பற்றி எந்த தகவலையும் யாரும் கொடுக்காததால் அரசே யார் என்று கண்டு பிடித்துள்ளது. கலவரத்தில் இறந்த 118 பேரும் எல்லையை தாண்டி ஊடுருவி வந்தவர்கள் என்றும்.., அப்பொழுது ஏற்பட்ட கலவரத்தில் இறந்துள்ளார்கள் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அவர்கள் எதோ ஒரு நோக்கத்துடன் மட்டும் தான் எல்லைக்குள் ஊடுருவி வந்துள்ளார்கள், அந்த 118 பேரும் மணிப்பூர் மக்களிடம் வீண் வம்பு செய்து வன்முறையில் ஈடுபட்டு சிலரை தாக்கி கொல்ல முயற்சித்ததால் பதிலுக்கு இவர்கள் தாக்கப்பட்டு மரணம் ஏற்பட்டுள்ளது, என அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மெஹாதா விளக்கி பேசியுள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர் இந்த வழக்கு குறித்து இதற்கு மேல் விளக்கம் கொடுக்க முடியாது என்றும் தொடர்ந்து பேசினால் இந்த பிரச்சனை சிக்கலாக மாறிவிடும், இதற்கு மேலும் இந்த உடல்களை பராமரிப்பு செய்ய முடியாது என்றும் கூறினார்.
Discussion about this post