விழுப்புரத்திற்கு வரவுள்ள 11 திட்டங்கள்…!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டியில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 சமூக நீதிப் போராளிகளுக்கு ரூபாய் 5 கோடியே 70 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபம் திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் உயிர்நீத்த 21 போராளிகளின் உறவினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து 35 ஆயிரத்து மூன்று பயனாளிகள் 323 கோடி 71 லட்சம் மதிப்பில் பல திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் திமுக அரசு காலத்தில்தான் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது பட்டியல் என மக்களுக்கு பதினாறு சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு 25 சதவீதத்திலிருந்து முப்பது ஒரு சதவீதமாக உயர்த்தப்பட்டது என்று தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பேருந்து நிலையம் திருவக்கரை கலையரங்கம் விழுப்புரம் திண்டிவனத்தில் பாதாள சாக்கடை திட்டம் சிட்கோ புதிய நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன 19,000 நிலம் தற்பொழுது வாசன வசதி படுகிறது என்று தெரிவித்தார்.
நிலம் நனைக்கும் வான்மழையென உங்கள் அன்பு!
நனைகிறேன்; இன்னும் இன்னும் உழைக்க உரம் பெறுகிறேன்!#விழுப்புரம் pic.twitter.com/NNABnrrnVi
— M.K.Stalin (@mkstalin) January 28, 2025
மேலும் விழுப்புரம் மாவட்டத்தின் புதிய அறிவிப்புகளாக சாத்தனூர் அணையில் இருந்து வரும் உபரி நீர் நந்தன் கால்வாய் திட்டத்தில் மதிப்பில் 34 கோடி மதிப்பில் செயல் படுத்தப்படும் என்றும் நலவானூர் அணைக்கட்டு 84 கோடி திட்டத்தில் புனர் அமைக்கப்படும் என்றும் விக்கிரவாண்டியில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் பல்நோக்கு சமுதாயக்கூடம் கட்டப்படும் என்றும், மரக்காணம் செஞ்சி ஆகிய பகுதிகளில் புதிய தொழிற் பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என்றும், கோலியனூர் கானை பகுதிகளில் 35 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட 11 திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று புதிய திட்டங்களை அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் எல்லாருக்கும் எல்லாம் யாருக்கும் யாரும் அடிமை இல்லை என்பது தான் திராவிட கருத்துகள் என்று தெரிவித்தார் திராவிட மாடல் ஆட்சியில் தான் அன்னைத் தமிழ் செம்மொழியாக மாறியது இட ஒதுக்கீடு பெரும் முறை கொண்டுவரப்பட்டது பெண்களுக்கு கல்வியில் உரிமை உருவாக்கப்பட்டது இனியும் இந்த திராவிட மடல் தொடரும் என்று தெரிவித்தார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..