நான்கு வயது முதல் 14 வயது வரை உள்ள 7 மாணவ மாணவிகள் இடைவிடாது 100 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பள்ளி மாணவ மாணவிகள் சான்றிதழ் வழங்கி பாராட்டு.
லண்டனை சேர்ந்த வேர்ல்ட் ரெக்கார்ட் ஆப் யூனியன் நிறுவனர் கிறிஸ்டோபர் நேரில் வந்து பார்வையிட்டு உலக சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் உலக சாதனைக்கான அங்கீகார சான்றிதழை வழங்கி பாராட்டினார்
பெரம்பூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மாநில செயலாளர் தமிழ்நாடு விளையாட்டு சிலம்ப கழகம் சந்திரமோகன் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் தமிழ்நாடு விளையாட்டு சிலம்பக் கழகம் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த உலக சாதனை போட்டி.
சீரும் சிலம்பம் ட்ரெடிஷனல் ஸ்போர்ட்ஸ் அண்ட் அசோசியேசன் ஆப் இந்தியா சார்பில் நடத்தப்பட்ட இந்த எலும்பு போட்டியில் ஏசியன் புக் ஆப் ரெகார்ட், இந்தியா புக் ஆப் ரெகார்ட், வேர்ல்ட் ரெக்கார்ட் ஆப் யூனியன், ஆகிய பதிவு செய்யப்பட்டது இதில் சிறுவன் சுந்தரவேலன், மற்றும் அபிஜித், அசோக், மாணவிகள் தீப்ஷிகா, ஹரிதாஸ்ரீ, வைஷ்ணவி லட்சுமி ராஜ் ஆகிய ஏழு மாணவ மாணவிகள் இடைவிடாது 100 மணி நேரம் சிலம்பம் சுற்றி மூன்று உலக சாதனை புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டன கடந்த 23 ஆம் தேதி முதல் துவங்கி 27 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைப்பெற்ற இந்த போட்டியினை பெற்றோர்கள் சிலம்ப வீரர்கள் பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உலக சாதனை படைத்த மாணவ மாணவிகளை பாராட்டினர் குதிரை மீது ஊர்வலமாக அழைத்து வந்து பாராட்டி சுழல் கோப்பை உள்ளிட்டவர்களை வழங்கினர்.
பயிற்சியாளர்கள் தெரிவிக்கும்போது இந்த உலக சாதனை செய்வதற்காக மாணவ மாணவிகள் கடந்த 9 மாதங்களாக பயிற்சி செய்ததாகவும் மாணவர்களிடையே உடல் வலிமை மனவலிமை தன்னம்பிக்கை உள்ளிட்டவைகளை ஊக்குவிக்கும் வகையில் இது போன்ற உலக சாதனை நிகழ்ச்சிகள் நடத்துவதாகவும் கடந்த முறை 12 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மாணவர்கள் தற்போது 100 மணி நேரம் இடைவிடாது செல்வம் சுற்றி சாதனை படைத்ததாகவும் மேலும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சிகளை அளித்து வருவதாகவும் சிறு வயதிலிருந்து இது போன்ற கடுமையான பயிற்சி மேற்கொண்டால் அவர்களது வாழ்க்கை தரம் உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் எனவும் பயிற்சியால் தெரிவித்தார்