10 நிமிட உணவு டெலிவரி குறித்து சொமேட்டோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்க போக்குவரத்துக்கு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ 10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்படி வாடிக்கையாளர் உணவு ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு சமூக வலையதளங்களில் மூன்று காரணங்களின் அடிப்படையில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று, டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு. 10 நிமிட டெலிவரி என அவசர அவசரமாக ஊழியர்கள் பயணிப்பதால் விபத்துகளுக்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்நிலையில், 10 நிமிடத்தில் உணவு டெலிவரி என அறிவித்த சொமேட்டோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்க சென்னை போக்குவரத்து காவல்துறை முடிவு எடுத்துள்ளனர். அதன்படி, குறைந்த நேரத்தில் உணவு வழங்க வேண்டும் என்பதால் சாலை விபத்துகள் அதிகரிக்கக் கூடும்.
உணவு விநியோகம் செய்யும் நபர்கள் போக்குவரத்து விதிகளை மீறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாலும் சொமேட்டோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்படவுள்ளது. இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளனர்.