10 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்..! தமிழ்நாடு அரசின் அதிரடி உத்தரவு..!
தமிழ்நாடு முழுவதும் 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐ.ஏ.எஸ். வருவாய்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய உள்துறை செயலாளரக தீரஜ் குமாரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கால்நடை மீன்வளத்துறை செயலாளராக கோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித் துறை செயலாளராக சிட்கோ இயக்குநர் மதுமதி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தகவல் தொழிநுட்பத் துறைச் செயலாளராக குமார் ஜெயந்த் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தின்போது மாவட்ட ஆட்சியராக இருந்த ஷர்வன் குமார் ஜடாவத், நகர்ப்புற மேம்பாட்டு வாரிய இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவைகள் துறை இயக்குநராக இருந்த சந்திரலேகா ஐ.ஏ.எஸ்., ராணிப்பேட்டை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி கலெக்டர் அருணா ஐ.ஏ.எஸ்., புதுக்கோட்டை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
லட்சுமி பவ்யா ஐ.ஏ.எஸ். நீலகிரி ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் ஆட்சியராக பிரியங்கா ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் ஐ.ஏ.எஸ்.சும், அரியலூர் ஆட்சியராக ரத்தினசாமி ஐ.ஏ.எஸ்.சும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்ட ஆட்சியராக சிபி ஆதித்ய செந்தில் குமார் என்பவரும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக அழகு மீனா ஐ.ஏ.எஸ்.சும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டு உள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சிம்ரன் ஜீத் சிங் கலோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுக்கான இட மாற்ற உத்தரவுகளை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..