நடிகர் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் ‘தக் லைஃப்’ வருகிற ஜூன் 5ம் தேதி ரிலீசாகிறது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ‘நாயகன்’ படத்திற்குப் பின் 36 ஆண்டுகளுக்குப் பிறகு, கமல், மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. இதனால், தக் லைஃப் படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. thuglife film first single song press meet
இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றதுது. இதில் ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம், கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு ‘தக் லைஃப்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தனர். குறிப்பாக விண்ணை தாண்டி வருவாயா படத்துக்கு பிறகு திரிஷா இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்துள்ளார்.
படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழாவில் தடபுடலாக விருந்து வைக்கப்பட்டுள்ளது. அசைவ ஐட்டங்களில் மட்டன் சுக்கா, மட்டன் பிரியாணி, சிக்கல் கோலா உருண்டை, தொக்கு, வஞ்சரம் மீன் போன்றவை பரிமாறப்பட்டுள்ளது., சைவத்தில் சில்லி மல்லி பன்னீர் வருவல், பனீர் பெப்பர் ப்ரே, பிரியாணி தொக்கு, கார கொழம்பு, உருளைக் கிழங்கு பரிமாறினார்கள்.
நாட்டுக் கோழி, நாட்டு சமையலுக்கு பெயர்போன சென்னையின் பிரபல ‘மஞ்சள் ரெஸ்டாரண்ட்’ இந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்தது. thuglife film first single song press meet