மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் இல்ல..!! குணாகுகையில் இன்று..!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது. இங்கு தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். தொடர்ந்து வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை ஆகிய நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். இந்த நிலையில் வார விடுமுறையை தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
முக்கிய சுற்றுலா பகுதிகளாக இருக்கும் மோயர் சதுக்கம் , குணா குகை, பைன் மர காடுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் இயற்கையின் அழகை ரசித்தும் தங்களது சுற்றுலாவை அனுபவித்து வருகின்றனர் . தற்போது மஞ்சுமல் பாய்ஸ் படம் வெளியான பிறகு பிரபலமாகி வரும் குணா குகை பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் அங்கு புகைப்படம் எடுத்தும் தங்களது சுற்றுலாவை மகிழ்ச்சி அடைந்து செல்கின்றனர் . மேலும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி , பாதுகாப்பு அம்சங்கள் குறைபாடு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர் . எனவே குணா குகை உள்ளிட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா இடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும், பாதுகாப்பு அம்சங்களை தீவிர படுத்த வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .