70 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுத்தைகள் மீண்டும் இந்திய மண்ணில் வந்தது நமக்கு கிடந்த பொக்கிஷம் என மத்தியப் பிரதேசத்தின் குனோ-பால்பூர் தேசியப் பூங்காவிற்க்கு வந்த புலிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில் இது ஒரு வரலாற்று நாள் என்று குறிப்பிட்டார். கடந்த காலங்களில் இந்தியா தான் சிறுத்தைகளின் தாயகமாக இருந்தது, ஆனால் சிறுத்தை இனம் 1952 இல் அழிந்துவிட்டதாக கூறபட்டது. இனி வரும் காலத்தில் உலகின் மிகப்பெரிய வனவிலங்கு இடமா மாற்றபடும் என கூறினார்.
சிறுத்தை புலி முகம் கொண்ட விமானம் குவாலியரின் மஹாராஜ்புரா விமானப்படை தளத்திற்கு இன்று காலை 8 மணிக்கு இந்திய விமானப்படை (IAF) மூலம் இயக்கப்பட்டது. விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, சிறுத்தைகள் விமானப்படை ஹெலிகாப்டருக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், குனோ தேசிய பூங்காவிற்கு பறந்து சென்றபோது அவர் மேற்பார்வையிட்டார்.
மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த சிறுத்தைகள் அடுத்த 24 மணிநேரத்திற்கு கண்காணிக்கப்படும் என உறுதி அளித்தார். செயற்கைக்கோள் மூலம் அவற்றின் இருப்பிடங்களை கண்காணிக்க அனைத்து சிறுத்தைகளிலும் ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 7,000க்கும் குறைவான சிறுத்தைகள் உள்ளன. ஜூலை 2020 இல், இந்தியாவும் நமீபியா குடியரசும் சிறுத்தைகளைப் பாதுகாப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், திட்ட சீட்டாவில் நமீபியாவின் பங்கேற்பு இருந்ததும், திட்டத்தை தொடங்குவதற்கு முதல் எட்டு சிறுத்தைகளை நன்கொடையாக வழங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது குறிபிடதக்கது.