தமிழகத்தின் முதல் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் செயல்பட்டு வரும் Spic தனியார் உரத் தொழிற்சாலையின் பயன்பாட்டுக்காக ரூ.150.4 கோடி செலவில் 75 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் முதல் மிதக்கும் சோலார் உற்பத்தி நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(மார்ச்.07) திறந்து வைத்தார்.
இதன் மூலம், தினமும் 22 மெகா வாட் என ஆண்டுக்கு 42 மி.யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என கூறப்படுகிறது.
இதில்,கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 1,150 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,000 கோடியில் அமைக்கப்பட உள்ள இந்த சர்வதேச பர்னிச்சர் பூங்காவுக்கான (அறைகலன் பூங்கா) அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார்.
இதனை தொடர்ந்து, தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரையண்ட் நகர், அம்பேத்கர் நகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிடுகிறார்.