ADVERTISEMENT
நிலை தடுமாறி உணவகத்தின் உள்ளே புகுந்த கார் அதிர்ச்சி சம்பவம்
வேலூர் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் உணவக பெண் உரிமையாளர் தூக்கி வீசப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் சித்தேரி பகுதியில் இருந்து பென்னாத்தூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த கார் ஒன்று, வேகத்தடையின் மேல் ஏற்றியதில் நிலை தடுமாறி அருகே இருந்த உணவகத்தின் உள்ளே புகுந்துள்ளது.
அப்போது உணவக உரிமையாளரின் மனைவி சாயிஷாவின் மேல் மோதி விபத்துக்குள்ளானதில், அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆயிஷாவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும் விபத்திற்கு காரணாமான ஓட்டுனர் கார்த்திக் என்பவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது விபத்து நடைபெற்ற சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.