ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சரளையில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு 63,858 பயனாளிகளுக்கு ரூ.167.50 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
பின்னர் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் என் உயிர் இருக்கும் வரை உழைத்து கொண்டேதான் இருப்பேன். புதிய புகழ் எனக்கு தேவையில்லை, இருக்கும் புகழே போதும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து கிரே நகரில் அமைக்கப்பட்டுள்ள எம்மாம்பூண்டி நீர்உந்து நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ஹெச்.கிருஷ்ணணுண்ணி மற்றும் நீர்வளத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.