இயக்குனர் பா. ரஞ்சித் படைப்பில் உருவாகியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழை தணிக்கைத் துறை வழங்கியுள்ளது.
யாழி பிலிம்ஸ் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக பா.ரஞ்சித் தயாரித்து இயக்கியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது. எங்கும் காதல், எதிலும் காதல். எங்கும் அரசியல், எதிலும் அரசியல் என முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தணிக்கைத் துறை ‘ஏ’ சான்றிதழை வழங்கியுள்ளது.
இதையம் படிக்க: http://shorturl.at/NOZ59
இத்திரைப்படம் வருகிற ஆக.31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுத் தெரிவித்துள்ளது.
https://twitter.com/officialneelam/status/1563036513037795331