இளமையும் பாவனாவும்..! பாவனா 38..!
தன்னுடைய பதினாறு வயதில் மலையாள திரைப்படத்தில் அறிமுகம் ஆனவர் இந்த நடிகை “கார்த்திகா மேனன்” என்ற பெயர் கொண்ட இவர் சினிமாவில் வந்த பிறகு “பாவனா” என மாற்றி கொண்டார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து வளம் வந்தவர். தமிழ் சினிமாவில் குறைந்த அளவில் படங்களில் நடித்திருந்தாலும், இவருக்கு என்று தமிழ் ரசிகர்கள் இன்று வரை இருக்கிறார்கள்.
தன்னுடைய காதலனை, இவ்வளவு அழகாக கவிதை நடையில் வர்ணிக்க கூடிய வகையில் அமைந்தது தான் இந்த பாடல். இவ்வளவு அழகான வரிகளை இவரால் மட்டும்தான் எழுத முடியும். என வைரமுத்து அவர்கள் எழுத இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் பாடகர்கள் சுர்முகி, குமரன் இருவரும் சேர்ந்து பாடிய பாடல் இது.
என் இதயத்தை களவாடிய கள்வனே, அந்த நீல நதிக்கரையின் அருகில் நீ நின்று கொண்டு இருந்தாய். நம் இருவரும் சேர்ந்தபடி ஒரு பாடலை பாடி கொண்டு வந்தேன் ஏன் காதலனே.
அந்த நீல நதிக்கரை
ஓரம் நீ நின்றிருந்தாய் நொடி
நேரம் நான் பாடி வந்தேன்
ஒரு ராகம் நாம் பழகி வந்தோம்
சில காலம்……….
இந்த படத்தில் பாவனாவிற்கு தனி ரசிகர் பட்டாளம் வந்து சேர்ந்தது என்று சொல்லலாம். இவருயை எதார்த்தமான நடிப்பில் தமிழ்நாட்டு பசங்க விழுந்துட்டாங்கனு சொல்லாம். படம் எந்த அளவிற்கு நல்ல இருக்குமோ அதைவிட பாடல்களும் இன்று வரை அனைவராலும் ரசிக்கக்கூடிய வகையில் இருக்கும்.
காதல் என்கின்ற ஒரு கடலில் நான் விழுந்து விட்டேன். அதில் இருந்து கரையில் வந்து சேர்ந்த பின்பும் நான் காதலில் மிதந்து கொண்டு இருக்கிறேன்,சின்ன வயதில் தேவதைகளின் கதைகளை நான் கேட்டுருக்கிறேன்.
ஆனால் நேரில் உன்னை பார்த்த பின்புதான் அதை உண்மை என நான் நப்புகின்றேன். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜ இசையமைக்க பாடகர் “விஜய் யேசுதாஸ்” பாடிய பாடல் இது.
காதல் என்னும்
கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும்
நான் மிதந்தேன்………
ஜன்னல் கம்பிகள் கூட உன்னுடைய கைகள் பட்டு வெள்ளி கம்பியாக மாறிவிட்டது, கரும்பு சக்கைகள் கூட உன்னுடைய கைகள் பட்டு தங்க சிற்பமாக மாறிவிட்டது இருவரும் தன்னுடைய காதலில் பரிமாறி கொள்ளும் வகையில் இருப்பதுதான் இந்த பாடல், உன் பூ போன்ற சிரிப்பில் என் தோள்கள் எல்லாம் றெக்கையாக மாறுகிறது,இந்த பாடலை இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையில் பாடகர்கள் ஹரிஹரன்,மது ஸ்ரீ இருவரும் சேர்ந்து பாடிய பாடல் இது.
நான் வரைந்து வைத்த சூரியன்
ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான் துரத்தி நின்ற காக்கைகள்
மயில்கள் ஆனதே…….
உன்மேல இருக்கிற ஆசையால் உனக்கா நான் கூரை பட்டு வாங்கி தருகிறேன் அதை நீ கடிக்கிறிய உன்னால தூங்காம சோறு தண்ணிகூட குடிக்காம நான் இருக்கிறேன் என்கிட்ட வாரிய இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடகர்கள் எஸ். பி. பி சரண் மற்றும் அனுராதா ஸ்ரீராம் இருவரும் சேர்ந்து பாடிய பாடல் இது.
உன்மேலே ஆசைப்பட்டு
உள்ளுக்குள்ள விருப்ப பட்டு
வாங்கி தரேன் கூர பட்டு
கட்டிக்கிறியா…..
பாவனாவிற்கு கண் அழகி என்ற மற்றொரு செல்ல பெயரும் உண்டு…, கடந்த ஜூன் 6ம் தேதி பாவனா தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடினார்.
– சரஸ்வதி.மு