உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்…!!
வேலூர் மாவட்டம் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையிலும் வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக பூர்வாங்க பூஜைகள், ஆறுகால யாகசாலை பூஜைகள் மற்றும் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் புனித நீரை ஊர்வலமாக கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சென்று கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக பேருந்து நெகுந்தி சுங்க சாவடியில் நிறுத்தப்பட்டு சுங்க சாவடி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் ஆம்புலனஸில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதில் நிர்மலாவிற்கு ஆம்புலன்ஸிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனை தொடர்ந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தாயும் சேயும் நலமுடன் அனுமதிக்கப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் இடிந்தகரை தூய லூர்து அன்னை ஆலயத்தின் தங்க தேரோட்டத்திற்கான கொடியேற்றம் கடந்த 2ம்தேதி தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் மக்களுக்கான பாய்மரபடகு போட்டி நடைபெற்றது. இதில் 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர். இதில் அனீஷ் குழுவினர் முதல் பரிசாக 1 லட்சத்தையும், ஜவஹர் குழுவினர் இராண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், ராஜேஷ் குழுவினர் மூன்றாம் பரிசாக 50 ஆயிரத்தையும் பெற்றுள்ளனர். இதில் வெற்றி பெற்ற அணியினரை ஊர் பொதுமக்கள் சால்வை அணிவித்து பாராட்டி வரவேற்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரிலிருந்து ஆர்கே பேட்டை , பள்ளிப்பட்டு, கேஜி கண்டிகை, திருத்தணி, நகர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பிரதான பாலமாக நந்தியாற்று பாலம் உள்ளது. இந்த நிலையில் நெடுஞ்சாலைத் தறையினர் இந்த பாலத்தை முறையாக பராமரிக்காமல் உள்ளதால் பாலத்தில் பக்கவாட்டில் இருபுறமும் செடிகள் வளர்ந்து வருவதால் வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளதாகவும், இதனை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் பொன்னை, வள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் பனி மழை பொழிவதால் வாகனங்களில் முகப்பு விளக்கை ஏரிய விட்ட வண்ணம், மிக குறைந்த வேகத்தில் வாகனங்கள் சென்றன. மேலும் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.