அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்க இளம்பெண் செய்த செயல்..!! ஊரும் உறவும் -29
சமூகத்தை நேசிப்பவர்களும்.., என்று மற்றவர்களை பற்றி யோசிப்பாவர்களும் மிக குறைவு.., ஆனால் அப்படி சமூகத்தை நேசித்தும் சமூகத்திற்காக வாழ்பவர்களும் என்றும் மக்கள் மனதில் நீங்காமல் இருப்பார்கள். உதாரணமாக “அன்னை தெரசா“.
அந்த வகையில் நாங்கள் சந்தித்தவர் தான் “டீனா ஜெயின்“. அவரை தொடர்பு கொண்டு நம் மதிமுகம் பேசிய போது..,
டீனா ஜெயின் வயது 22, இவர் பிறந்த ஊர் “வாரணாசி “, வாரணசியில் பள்ளி படிப்பு மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். சமூக நலனில் அதிக ஆர்வம் கொண்ட இவர், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகளை கண்டு மனம் வருந்திய டீனா ஜெயின், அரசு பள்ளியில் இருக்கும் சில செயல்களை மாற்ற விரும்பினார்.

முக்கியமாக சில மாணவர்கள் படிப்பில் ஆர்வம் மிகுதி ஒரு சில மாணவர்களுக்கு.., படிப்பில் ஆர்வம் குறைவு.., அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களை ஊக்கு வித்து.., பள்ளி படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு புது வித முயற்சி செய்துள்ளார்.
அரசு பள்ளிகளின் கட்டிட அமைப்புகள் போல் இல்லாமல் இருக்கின்றது. எனவே அதை சற்று மாற்றி அமைத்தால் மாணவர்கள் ஆர்வத்துடன் வருவார்கள் என சிந்தித்து ஒரு புதிய யுக்தியை கையாண்டுள்ளார்.
டீனா ஜெயின் வசிக்கும் பகுதிக்கு அருகில் இருக்கும், அரசு பள்ளியை பார்வையிட தீர்மானைத்தார். அங்கு படிக்கும் மாணவர்களுக்கு “பயிலரங்குகள்” ஏற்பாடு செய்ய திட்ட மிட்டுள்ளார். மேலும் மற்ற மாணவர்களுடன் கலந்து பேசி.., அவர்களுக்கு தேவையான உதவிகள் கேட்டு கொண்டு அதையும் செய்து கொடுத்துள்ளார்..
அது மட்டுமின்றி உடன் இருக்கும் நண்பர்கள் உதவியுடன் பள்ளி சுவர்களில் ஓவியம் வரைந்து மாணவர்கள் கல்வி அறிவு வளரும் வகையிலும், அவர்களை கவரும் வகையிலும் ஓவியங்கள் வரைந்துள்ளார். மேலும் மாணவர்களையும் சுவரில் ஓவியம் வரைய வைத்து.., ஓவியத்தில் ஆர்வம் கொடுத்துள்ளார்..,
இவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் பல அரசு பள்ளிகளுக்கும் இவர் உதவ போவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இதுபோன்ற பல உண்மை கதைகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post