எவள் வருவாளோ அவளே..! ஒர் உறவு..!
எனக்குள் உயிரென நான் நினைத்த உத்தமியான என் காதலி.., முடி என நினைத்து மதிமயங்கி, சென்றிருந்தாலும்.. கற்பனைகளை கவிதைகளாக கோர்த்திட்டேன்.. அவள் மீது, அவளோ, சாதியின் பெயரை சொல்லி, தரம் தாழ்ந்து கிடக்கும் என்னோடு வாழ விட மாற்றார்கள் என்றெண்ணி, காதலை மூடி மறைத்து, எனையும் விட்டு விலகிதான் செல்கின்றாளே.,
இதனை உணராது போன நானும், காதலை “கடவுளாக” நினைத்து, கண்மூடித்தனமாக வணங்கும் “கபடமற்ற” ஆண் மகனாக ஏங்கித் தான் தவிர்த் திருந்தேன். இருந்தும், இந்த “சமூகத்தின்” பார்வையில் இருக்கின்ற “சாதி, மதங்களின் ஏற்றதாழ்வு களில் கண்டிப்பாக கரை ஏற மாட்டாய் என்று சொல்லி வந்தார்கள் “துறவிகளாகி” போன பலரும்..
காதலை உண்மையென நினைத்து, “உயிர்தனை” அதில் வைத்து, பின்னால் பிரிவதை கண்டு “பித்தனாகதான்” ஆகாதீர். என்ற, அறிவுரைகள் அவர்களது அனுபவபட்ட இதயமாகலாம். அதனது உணர்வின் வேதனையில் “தாடியுடன்” சுற்றி திரியும், அவர்களை வேண்டுமானால், அனைவரும் “ஞானிகளாக” வணங்கி மகிழலாம்.
அதற்காக நானும், அவர்களது பின்னால் சென்றால், என் வாழ்வும் “விடை தெரியா” கேள்விகளாக தான் போயிருக்கும் என்பதை உணர்ந்தேன்.
இப்படியிருந்த, என்னை “ஏற்றுக்கொள்ள” எவள் வருவாளோ அவளே..! என் வாழ்விற்கான “முன்னுரை” எழுத வந்தவளென உணர்ந்தேன். கூடி வந்தது “ஒர் உறவு”. இளம் வயதில் கணவனை இழந்து, ”விதவை“யெனும், பெயரை சுமந்து வாடும், அவளே..! என் வாழ்விற்கான முகவரி தந்து “பிள்ளையார் சுழி” போட்டவளானால். ஆம்.
“அவளுடன்” இணைந்து வாழும், எங்களது இருவரது வாழ்வும், முடிவுரை எழுதியவர் களுக்கெல்லாம். முன்னுரையாகும் உரிமைக்கான உணர்வுகளை எடுத்து சொல்லும், “பொன்னாளாகும் ஓர் நாள்.
வீர பெருமாள் வீர விநாயகம்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..