குறைவான வெளிநாடு பயணம் சென்ற பிரதமர் யார்..? பிரதமர் நரேந்திரமோடி – மன்மோகன் சிங்..?
பிரதமர் மோடி 3 ஆண்டுகளில், மன்மோகன் சிங்கை விட குறைவான வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார் என பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்..
பானாஜியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் உரையாடியதில் பாஜக தலைவர் மக்கள் ஏன் வேறு விதமாக.., நினைகின்றார்கள் என்று கூறியுள்ளார். அதற்கு பின்னால் உள்ள காரணத்தை பாஜக தொண்டர் ஒருவர் தன்னிடம் விளக்கி கூறியுள்ளதாக அமித்ஷா பேசியுள்ளார். மன்மோகன் சிங் வெளிநாடுகளுக்கு செல்வது யாருக்கும் தெரியாது. என்று கட்சி தொண்டர் ஒருவர் என்னிடமே கூறியிருந்தார்.
டாக்டர் மன்மோகன் சிங் குறித்து விமர்சித்த அமித்ஷா.., முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் செல்லும் வெளிநாட்டு சுற்று பயணங்களில் “எழுத்து பூர்வமான உரைகளை வாசிப்பார்”. அவர் எழுதப்பட்ட பக்கங்களை எடுத்துச் சென்று படித்து விட்டு திரும்பி வருவார். சில சமயங்களில் மலேசியாவில் படிக்க வேண்டிய பக்கங்களை தாய்லாந்திலும்.. மாற்றி மாற்றி படித்து விடுவார் என அமிதா ஷா பேசியுள்ளார்.
மன்மோகன் சிங்கின் வெளிநாட்டு பயணங்களின் வெளிநாட்டு பயணங்களின் தாக்கத்தோடு பிரதமர் மோடியின் தாக்கதோடு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது. மன்மோகன் சிங்கின் ஆட்சி காலத்தில்.., அப்போதைய இந்திய பிரதமர், சீனா, அமேரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு செல்லும் பொழுது.., அவரை வரவேற்க ஆயிரம் கணக்கான மக்கள் விமான நிலையங்களில் கூடுவார்கள்.., அப்பொழுது தான் இந்திய பிரதமர் எவ்வளவு உலக பயணங்கள் செல்கிறார் என்பது மற்றவர்களுக்கும் தெரியும் என, அமித்ஷா விமர்சித்துள்ளார்.
Discussion about this post