தமிழக மக்களே உஷார் அடுத்த 8 நாளைக்கு கனமழை..!! எந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் அதிக மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
இன்று கடலோர பகுதிகளில் மாலை நேரத்தில் அதிக மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளுக்கு அருகே புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவானது. தென்மேற்கு பருவமழை முடிவடையும் நிலையில், இன்று இந்தியா முழுவதும் மழைக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், அரியலூர், திருச்சி, கோவை, விழுப்புரம், என அனைத்து மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும் எனவும் பிற மாவட்டங்களான சேலம், கன்னியாகுமரி, நாகை, திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளை கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
Discussion about this post