சமூகநீதிக்கு எதிரான விஸ்வகர்மா திட்டம்..!! ஒருபோதும் ஏற்கமாட்டோம்..!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் சமூகநீதிக்கு எதிரான ஒன்றாக இருப்பதால் அதனை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.
கலைஞர் கைவினைத் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் இன்று தொடங்கி வைத்தார். அதன் பின்னர் 34 கோடி ரூபாய் மானியத்தை, 170 கோடி ரூபாய் கடன் ஒப்புதலுக்கான ஆணைகளை 8951 பயனாளிகளுக்கு வழங்கினார்.
அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக நீதி, சம நீதி, மனித நீதி மற்றும் மனித உரிமை நீதியை நிலைநாட்டும் திட்டமே கலைஞர் கைவினைத் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் 25 தொழில்கள் சேர்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் பிரதமர் மோடியின் விஸ்வகர்மா திட்டத்தின் சமூக நீதியை நிலைநாட்டும் திட்டமில்லை என்றும் விஸ்வகர்மா திட்டத்தில் இணைவதற்கு 18 வயது முதல் அனுமதி என்ற வயதினை கண்டு தாம் அதிர்ச்சி அடைந்ததாக சாடினார். மேலும் 18 வயது உடைய ஒருவர் உயர்கல்வி பயில வேண்டுமா..? அல்லது குலத்தொழிலை செய்ய வேண்டுமா..? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், மத்திய பாஜக அரசின் இந்த விஸ்கர்மா திட்டமானது சமூகநீதிக்கு எதிராக இருப்பதால் இதனை ஏற்கமாட்டோம் என்று குலத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் உள்ள விஸ்வகர்மா திட்டத்தை சாதிய பாகுபாடு நிறைந்த இந்தியாவில் ஏற்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
18 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கும் இந்த விஸ்வகர்மா திட்டத்தை 35 ஆக உயர்த்தி அந்த வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில் அதனை மாற்றிட வேண்டி பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருந்ததை சுட்டிக்காட்டி பேசிய அவர் தாம் எடுத்துரைத்த 3 திருத்தங்களை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டதாக வேதனை தெரிவித்தார்.