விஜயதாரணியின் மாஸ்டர் பிளான்..! மணிப்பூரில் வெடித்த கலவரம்..!!
விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக கடந்த மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயதரணி, இந்த முறை கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட விரும்பியுள்ளார்.
ஆனால் காங்கிரஸ் தலைமை அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை, அதனை தொடர்ந்து அவர் பாஜகவில் இணைந்தார்.
அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என நினைத்திருந்தார் ஆனால் பாஜகவில் அவருக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது.
விஜயதரணி :
ஆனால் பாஜகவில் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு கூட இவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
அதனால் அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் பாஜகவில் தனது நிலை என்ன என்பது குறித்து பேசி இருக்கிறார்.
அது குறித்து நம் மதிமுகம் அவரை தொடர்பு கொண்டு பேசியது, அப்போது பேசிய அவர்,
மக்களவைக்கான நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் இல்லை. விளவங்கோடு சட்டசபைக்கான வேட்பாளர் பட்டியலிலும் என் பெயர் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடலாம் என நான் இருந்தேன்.
ஆனால் சட்டசபை தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை.
கடந்த மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்ததால், இந்த முறை அடுத்த தலைமுறையினருக்கு வழிவிட நினைத்தேன்..
நான் போட்டியிடவில்லை. என்றாலும் தற்போது விளவங்காடு தொகுதியில் பெண்கள் போட்டியிடுவது எனக்கு மகிழ்ச்சி என்றார்.
விளவங்கோடு தொகுதி :
விளவங்கோடு தொகுதியில் பாஜக வெற்றி பெறும் என நாங்கள் எதிர் பார்க்கிறோம். பாஜக மீது களங்கம் வரவைக்க வேண்டும் என்பதற்காக சிலர் உள்ளிருந்தே வேலை பார்க்கிறார்கள்..
அதை மக்கள் முன்னாடி திரையிட்டு காட்ட பல விவகாரங்களை சேகரித்து வருகின்றனர்.
குறிப்பாக மணிப்பூரில் நடந்த கலவரத்திற்கு என்ன காரணம் என விவரங்களை சேகரித்து வருகிறேன்.
திட்டமிட்டு கலவரம் :
அங்கு நடந்த விஷயங்கள் பிரதமரின் கவனத்தில் உள்ளது. தொடர்ந்து அங்கு நடக்கும் விஷயங்கள் குறித்து மோடியின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
மணிப்பூரில் கலவரம் வெடித்த நிலையில் நிறைய பேர் அங்கு ஊடுருவி உள்ளனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த பலர் மணிப்பூரில் ஊடுருவி இருப்பதால் உடனடியாக அதனை தடுத்து நிறுத்த முடியவில்லை…
மணிப்பூரில் திட்டமிட்டு அவர்கள் கலவரத்தை தூண்டியுள்ளனர். இதற்கான ஆதரங்கள் விரைவில் நாங்கள் வெளியிடுவோம்..