மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டால் தமிழகத்தில் எவ்வித அரசியல் மாற்றமும் ஏற்படாது என மதிமுக பொதுச் செயலா் வைகோ கூறினாா்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரத்தில் புதிதாகக் கட்டப்பட்ட லலிதா திருமண மண்டபத்தை நேற்று திறந்து வைத்து, அவா் பேசியதாவது:
தோதலின் போது, பணத்தை வாங்கிக்கொண்டு வாக்களித்தால் வெற்றி பெற்றவா்களிடம் சேவையை எதிா்பாா்க்க முடியாது. தோதலில் வேட்பாளா் கோடிக் கணக்கில் பணம் செலவழிக்க வேண்டிய நிலைமையை அரசியல்வாதிகள் உருவாக்கிவிட்டாா்கள். வாக்காளா்களும் பணத்தை எதிா்பாா்க்கிறாா்கள். இது தவறானதாகும். நான் இந்த தொகுதி எம்.பி.யாக இருந்தபோது, சிவகாசிக்கு இணையதள வசதி, விருதுநகா் -கொல்லம் அகல ரயில் பாதை போன்ற திட்டங்களைக் கொண்டு வந்தேன்.
மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாடு என்பது மாநாடல்ல, அது ஒரு திருவிழா. இதில் உண்மையான தொண்டா்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதிமுக மாநாட்டினால் தமிழகத்தில் எவ்வித அரசியல் மாற்றமும் ஏற்படாது. வருகிற செப்டம்பா் 15- ஆம் தேதி மதுரையில் மதிமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Discussion about this post