விஜயின் பெயரை கெடுத்த த்ரிஷா..!!
14 வருடத்திற்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற ட்விட்டர் பதிவு மூலம் கோலிவுட் சினிமாவை அதிர வைத்திருந்தார் பாடகி சுசித்ரா. அதோடு காணமல் போன சுசித்ரா கடந்த இரண்டு தினங்களாக ஒரு சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டிகளை கொடுத்து வருகிறார்.
அந்த பேட்டியில் நிறைய ஹீரோ, ஹீரோயின்களை பற்றி தவறாக பேசியுள்ள நிலையில் தற்போது விஜய் மற்றும் திரிஷாவை பற்றி பேசியுள்ளது கோலிவுட் வட்டராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் மற்றும் திரிஷா திருப்பாச்சி, ஆதி, குருவி, கில்லி என பல ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளனர். ஆனால் கில்லி படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை.
அதன் பின்னர் ஏன் நடிக்கவில்லை என குழம்பி போன ரசிகர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். ஆனால் இரண்டு பேர் தரப்பிலும் எந்த பதிலும் வரவில்லை. சிறிது நாள் கழித்து ஒரு தகவல் வைரலாக பரவி வந்தது.
அதாவது திரிஷா குடித்துவிட்டு விஜய் வீட்டின்முன் டான்ஸ் ஆடி ரகளை செய்ததாகவும் கூறப்பட்டது. அதனால் தான் இருவரும் ஒன்றாக நடிப்பதை நிறுத்திவிட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அது உண்மையா பொய்யா என்று யாருக்கும் தெரியாது.
ஏனென்றால் மொபைல் போன்கள் அதிக புலக்கமில்லாத காலத்தில் அது நடந்ததால் இப்போதைக்கும் அந்த விஷயத்துக்கு ஆதாரம் என்று எதுவும் கிடையாது. ஆனால் இப்படி ஒரு விஷயம் நடந்தது என்பது எல்லோருக்குமே சட்டென ஞாபகத்திற்கு வந்து போகும்.
ஆனால் பாடகி சுசித்ரா இது உண்மை தான் என்றும், விஜயின் பெயரை கெடுப்பதற்கு தான் இப்படி திரிஷா செய்ததாகவும் கூறியுள்ளார்.
ஒரு போதை பார்ட்டியில் த்ரிஷாவை இவ்வாறு செய்ய சொல்லி அவருடைய நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதை டேர் கேம் என்று சொல்வார்கள்.
தைரியமாக இந்த விஷயத்தை செய்ய வேண்டும், இல்லை என்றால் நாங்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் இது. அப்படி த்ரிஷாவுக்கு கொடுக்கப்பட்ட டேர் தான் விஜய் வீட்டு முன்னாடி டான்ஸ் ஆடுவது.
த்ரிஷாவும் போதையில் அவர் வீட்டு முன்னாடி காரை நிப்பாட்டி விட்டு அதனால் தான் ஆடி இருக்கிறார். என்று சுசித்ரா அந்த பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் இது உண்மையில் விஜயின் பெயரை கெடுப்பதற்காக செய்யபட்டதா இல்லை திரிஷா போதையில் தான் செய்தாரா என்பது அந்த கடவுளுக்கு தான் தெரியும்…
– பவானி கார்த்திக்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..