திருச்சி டூ தாம்பரம் முன்பதிவு இல்லா சிறப்பு ரயில்..! தெற்கு இரயில்வே அசத்தல் அறிக்கை..!
தற்போது கோடை விடுமுறை நிறைவையொட்டி மக்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருப்பதால்.., மக்களின் நலனை கருத்தில் கொண்டு தென்னக இரயில்வே ஒரு சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளது.
அதாவது திருச்சியில் இருந்து, தாம்பரத்திற்கு முன்பதிவில்லாத சிறப்பு மெமு இரயில் ஒன்று இயக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு இரயிலானது இன்று இரவு 11 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த இரயில் திருவெரும்பூருக்கு இரவு 11:20க்கும்,
பூதலூருக்கு இரவு 11:36 மணிக்கும்,
தஞ்சாவூர் இரவு 11:57 மணிக்கும்,
பாபநாசத்திற்கு இரவு 12:21 மணிக்கும்,
கும்பகோணத்திற்கு இரவு 12:34மணிக்கும்,
மயிலாடுதுறையில் இரவு 12:54 மணிக்கும்,
வைதீஸ்வரன் கோயில் 1:13 மணிக்கும்,
சீர்காழி இரவு 1:20 மணிக்கும்,
சிதம்பரம் 1:33 மணிக்கும்,
கடலூர் துறைமுகம் 2:06 மணிக்கும்,
திருபாதிபுலியூர் 2:13 மணிக்கு,
பன்ருட்டி 2:42 மணிக்கு,
விழுப்புரம் 3:40 மணிக்கு,
திண்டிவனம் காலை 4:13 மணிக்கு,
செங்கல்பட்டு காலை 5:18 மணி என இறுதியாக தாம்பரத்திற்கு அதிகாலை 6:05 மணிக்கு வந்து சேரும் .
நாகர்கோவிலிருந்து தாம்பரத்திற்கு சிறப்பு இரயில்கள் இயக்கப்படுவது வழக்கம் தான்., ஆனால் தற்போது கோடைவிடுமுறை என்பதால் இரயிலில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு கூட்டத்தை கட்டு படுத்துவதற்காக இந்த சிறப்பு இரயில்கள் இயக்கப்படவுள்ளது.
சென்னை எழும்பூர் டூ சேலம் சிறப்பு இரயில் :
அதேபோல் சென்னை எழும்பூர் டூ சேலம் இரயில் மேல்நாரியப்பனூர் இரயில் நிலையத்தில் இந்த சிறப்பு இரயிலானது தற்காலிகமாக நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விருத்தாசலம் டூ சேலம் சிறப்பு இரயிலானது காலை 07.15 மணி, காலை 11.30 மணி, மாலை 02.30 மணி, இரவு 08.30 மணி என மொத்தம் நான்கு நேரங்களில் மேல்நாரியப்பனூர் வந்து சேரும்.
அது தவிர காரைக்கால் – பெங்களூர் இரயில் காலை 11.30 மணிக்கும், பெங்களூரு – காரைக்கால் ரயில் மாலை 03.00 மணிக்கும் மேல்நாரியப்பனூர் இரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு இரயிலானது சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து சேலம் வரை சூப்பர் ஃபாஸ்ட் ரயில் ஜூன் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை இயக்கப்படவுள்ளது.
இந்த 4 நாட்களும் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11:55 மணிக்கு புறப்பட்டு., மேல்நாரியப்பனூர் இரயில் நிலையத்தில் இரண்டு நிமிடம் நின்று செல்லும்.
அதேபோல் அதிகாலை 4:19 மணிக்கு மேல்நாரியப்பனூர் இரயில் நிலையத்திற்கு வந்து சேரும், என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
வழக்கத்தை விட கூடுதல் இரயில்கள் தற்போது இயக்கப்பட்டிருப்பதால், மக்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் பயணம் செய்யும் படியும் தென்னக இரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
– லோகேஸ்வரி.வெ