நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடர் அமளிலே முடிந்ததால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் சிறப்பாக நடைப்பெற முடியாமல் இருந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஆண்டில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஆயத்தமாக தற்போது 5 நாள் கொண்ட சிறப்புக் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று முதல் 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் இன்று தொடங்கிய நாடாளுமன்ற கூட்டம் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இதனிடையே மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு பேசினார்.
அப்போது பேசிய அவர்,
திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிட்டாலும் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கிறது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது, ஏற்கனவே உள்ள புண்ணில் உப்பை கொட்டுவதற்கு சமம் . காஷ்மீர், மணிப்பூர், தமிழ்நாடு உள்பட எந்த மாநிலத்துக்கும் பா.ஜ.க அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறியுள்ளார்.