தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒன்றிய அரசு பொது மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றியும் இறக்கியும் வருகிறது. அந்த வகையில் நேற்று சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிரடியாக குறைத்தது.
அந்த வகையில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை நள்ளிரவு முதல் உயர்த்தி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள பரனூர், விக்கிரவாண்டி, ஓமலூர், தருமபுரி உள்பட 28 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் சராசரியாக ரூ. 5 முதல் ரூ. 240 வரை உயர்ந்துள்ளது. இதனால் ஏற்றுமதி இறக்குமதி பொருட்களின் விலை உயரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.