தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து 5,590 ரூபாயாகவும், சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 44,720 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
அதேசமயம் ஆபரண தங்கத்தை விட சுத்த தங்கத்தின் விலை சரிந்துள்ளது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 11 ரூபாய் குறைந்து 6,027 ரூபாய்க்கும், சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து 48,216 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராமிற்கு ஒரு ரூபாய் 30 காசுகள் அதிகரித்து 77 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோவிற்கு ஆயிரத்து 300 ரூபாய் அதிகரித்து 77 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
டாலரின் மதிப்பு சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக அளவிலான முதலீடுகளை செய்து வருவது விலை உயரக்காரணமாக அமைந்துள்ளது.