இந்த மனசு தான் சார் கடவுள்..!! கண்கலங்கி கும்பிட்ட ரசிகர்கள்..!! அசத்தும் ராகவா லாரன்ஸ்..!!
பொதுவாக நடிகர்களுக்கு உதவும் எண்ணம் குறைவு என சொல்லுவார்கள் ஆனால் ஒரு சில நடிகர்கள் உதவுவது வெளியில் தெரியாமல் உதவுவார்கள்.., இன்னும் சிலர் உதவுவதற்காக ரசிகர்கள் கூட்டம் அமைத்து உதவுவார்கள்.., ஆனால் ஒரு சிலர் மட்டுமே நடிப்பில் ஹீரோவாக, வில்லனாக, காமெடியனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் கர்ணனாக இருப்பார்கள்..
அப்படி இன்று மக்கள் மனதில் கர்ணனாக இருக்கும் நடிகரும் நடன மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் மாஸ்டர் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது..
1993ல் நடன இயக்குனராக தொடங்கிய இவரது வாழ்க்கை சினிமாவில் இவருக்கு இருந்த ஆர்வத்தால் 1998ல் தெலுங்கில் வெளியான ஸ்டைல் என்ற படத்தின் மூலம் நடிகராக என்ட்ரி கொடுத்தார்.., ஆனால் தமிழில் வந்த படங்களில் இவர் நடிக்க தொடங்கினார்..
ஆனால் இவரின் படங்கள் அந்த அளவிற்கு இவருக்கு கை கொடுக்கவில்லை அதன் பின் 2003ம் ஆண்டு வெளிவந்த திருமலை படத்தில் “தாம் தக்க தீம் தக்க” பாடலில் நடிகர் விஜயுடன் இணைந்து நடனம் ஆடியிருப்பார்..
இது ராகவா லாரன்ஸ்க்கு மட்டுமின்றி தளபதி விஜய்க்கும் ஒரு திருப்பு முனையாக மாறியது என்று சொல்லலாம் காரணம்.., இவர்கள் இருவரும் இணைந்து ஆடிய அந்த பாடலில் அவர்களுக்கு என்று ஒரு ஸ்டைல் வெளிப்படுத்தினார்கள்..
இதனால் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு அதிக பட வாய்ப்பு வர தொடங்கியது.., அற்புதம், இரும்பு கோட்டையில் முரட்டு சிங்கம்.., , மொட்ட சிவா கெட்ட சிவா.., ருத்ரா, பாண்டி
என பல படங்களில் நடித்தாலும் இவருக்கு ஹிட் கொடுத்த படங்கள் என்னவோ காஞ்சனா-1, காஞ்சனா-2, காஞ்சனா-3, ஜிகிர்தாண்டா டபுள் எக்ஸ். போன்ற படங்கள் நல்ல வசூல் பெற்ற படங்கள் என சொல்லலாம்.
இவர் இதுவரை தன்னுடைய நடனத்திற்காக 4 பிலிம் பேர் விருதினையும், 3 நந்தி விருதினையும் பெற்றுள்ளார்.
ஒரு மனிதன் தான் பெற்றவர்களை தெய்வமாக பார்க்கிறேன் என வார்த்தையில் சொல்லுவார்கள்.., ஆனால் நிஜ வாழ்க்கையில் தன்னை பெற்ற தாயுக்காக கோவில் கட்டிய ஒரு சிறந்த மனிதர் என சொல்லலாம்..
அம்மாவிற்கு மட்டும் சிறந்த மகனாக இல்லாமல் உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்காக ஒரு ஆசிரம்பத்தை தொடங்கி இன்று வரை உதவி செய்து வருகிறார்.., இது மட்டுமா அந்த இளைஞ்சர்களை அவரது படத்திலும் அறிமுகம் செய்து அழகு பார்த்த ஒரு சிறந்த மனிதர் இவர் என்று சொல்லலாம்..,
என்னிடம் உதவிக்கேட்டு வருபவர்களுக்கு மறுக்காமல் உதவி செய்வதற்காகவே அசோக் நகரில் லாரன்ஸ் சேரட்டி ( No.2/ 4, 1st Sarvamangalam colony, Ashok Nagar,Pudur, Tamil Nadu 600083 Phone: 044 4215 4541 ) ஒன்றை தொடங்கி பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்..
குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைகளுக்கு உதவியுள்ளார். 2017ம் ஆண்டு தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றார்.. அதிலும் போராட்டக்காரர் களுக்கு உணவு, மருந்து மற்றும் தண்ணீர் என அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தார்..
இப்படி அனைவருக்கும் தன்னால் முடிந்த வரை அனைத்து உதவிகளையும் செய்து வந்த இவர் கடந்த மாதம் கணவரை இழந்து இரண்டு குழந்தைகளுடன் தனியாக கஷ்டப்பட்டு வந்த பெண்ணிற்கு காமெடி நடிகர் பாலாவுடன் இணைந்து ஆட்டோ வாங்கி கொடுத்தார்..
அதனை தொடர்ந்து கடந்த வாரம் உடல் ஊனமுற்ற பெண் குழந்தைகளை வைத்து வேலைக்கு சென்று வர கஷ்டப்படும் பெண்ணிற்கு ஒரு புது ஸ்கூட்டி வாங்கி கொடுத்து இருவரும் உதவினார்கள்.., இந்த செயல்கள் பார்க்கும் அனைவரையும் கண் கலங்க வைத்தது..
நேற்று 13 ஊனமுற்ற இளைஞ்சர்களுக்கு.., ஸ்கூட்டி வாங்கி கொடுத்து மகிழ்வித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.. அதன் பின் நம் மதிமுகம் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசிய போது இளைஞர்கள் கூறியதாவது..,
நிஜ வாழ்க்கையில் நாங்கள் கடவுளாக பார்ப்பது எங்கள் அண்ணனை மட்டும் தான் பெற்றவர்கள் கூட எங்களை பாரமாக தான் பார்க்கிறாங்க.., ஆனா எங்க என்ன எங்களை அவர் கூட பொறந்த தம்பி மாதிரி பாசம் கட்டுறாரு.., என கண் கலங்கிய படி கூறினார்கள்..
இப்படி மட்ட ஒரு சிறந்த மனிதரை பற்றி கட்டுரை எழுத வாய்ப்பு கொடுத்த ராகவா லாரன்ஸ் அண்ணாவை நினைத்து மதிமுகம் என்று பெருமை கொள்ளும்..