ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான உண்மை காரணங்கள்..! இந்த கொலையின் பின்னணியில் இருப்பவர்கள்..?
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்., அந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.. இந்நிலையில் கொலைக்கான காரணங்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
1. வட சென்னையில் அசைக்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக பசக உருவெடுத்தது. இதனால் பல ரவுடிகள் பிழைப்பு நடத்த இடைஞ்சலாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அதே சமயம் சில அரசியல் தலைவர்கள் பற்றி எதிர்த்து பேச தொடங்கியது. இளைஞர்களிடம் அண்ணல் அம்பேத்காரின் கொள்கைகள் குறித்து எடுத்துரைத்து , திசைமாறி சென்ற இளைஞர்களை நல்வழிப் படுத்தினார் ஆம்ஸ்ட்ராங்.
பவுத்த விழா எடுத்து , பஞ்சசீல கொள்கைகளை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சென்றது. கொளத்தூர் தொகுதியில் மக்கள் மத்தியில் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றது. பாசிசத்திற்கு எதிராக கடுமையாக மக்கள் பணியாற்றியது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து அரசியல், சினிமா, விளையாட்டு, சட்டம், பவுத்தம் ஆகியவற்றின் ஆதிக்கம் செலுத்தி கோலோச்சி நின்றது.
2. பார் கவுன்சில் தேர்தலில் தலைவர் பொறுப்பை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்தது. வருகின்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது. ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்களை உருவாக்கி சென்னை உயர்நீதிமன்றத்தில் எந்த தேர்தல் வந்தாலும் அதை தீர்மானிப்பது. அதை தனது கோட்டையாக மாற்றிக்கொண்டது.
3. ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்ட பட்டியலின உள்ளிட்ட பிற மக்கள் 170 பேர் கண்ணீரோடு இவரை அனுகிய போது, அந்த மோசடி நிறுவனத்தை பற்றி நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களை கொண்டு புகார் கொடுக்க வைத்து , மக்கள் கொடுத்த பணத்தை மீட்டு அவரவர் வங்கி கணக்கில் வர செய்தவரும் “ஆம்ஸ்ட்ராங்”.
4. திருவள்ளூர் மாவட்டத்தில் 10 பஞ்சாயத்து தலைவர்கள், ஆவடி மாநகராட்சியில் 3 கவுன்சிலர்கள் என பகுஜன் கட்சி சார்பில் வெற்றி பெற வைத்தார்.., அதே சமயம் வெற்றி பெறாத அந்த கட்சி அந்த மாவட்டத்தில் சிம்ம சொப்பனமாக காணப்பட்டது. மிகப்பெரிய அறிவார்ந்த அரசியல் சக்தியாக தமிழ்நாட்டில் உருவெடுத்தது.
5. எல்லாவற்றையும் விட நிலப்பிரச்சினையில் அரசியல் அதிகாரம் மிக்க, ஆட்சியில் உள்ள கட்டுமான நிறுவனத்தோடு பிரச்சினை. இதனால் ஏற்கனவே முன் பகை உள்ள ரவுடிகளை எல்லாம் ஒருங்கிணைத்து இந்த படுகொலை அரங்கேற்றம் செய்யப்பட்ட்டிருக்கலாம் அதன் பின்னணியில் அந்த கட்டுமான நிறுவனம் இருக்குமோ..? என்ற சந்தேகம் எழ தொடங்கியது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை என்பது ஒரு திட்டமிட்ட அரசியல் படுகொலை என்பதால் காவல்துறையும் அதில் மவுனம் காத்தது.
தனக்கு வரும் ஆபத்தை எப்போதும் முன்கூட்டியே கணிக்க கூடிய ஆம்ஸ்ட்ராங் அவர்கள் அதற்கு ஏற்றார் போல முன்னெச்சரிக்கையாக இருப்பார். முறையான பாக்சர்.., நல்ல கராத்தே தெரிந்தவர்., எத்தனை எதிரிகள் வந்தாலும் சமாளிக்க கூடியவர். பின்னாடி வந்து கழுத்தில் வெட்டி, எந்திரிக்க விடாமல் காலில் வெட்டிய நிலையில் அவரை கொலை செய்து, தடுக்க முற்பட்ட போது அவர் கையில் கூலிப்படை வெட்டியுள்ளனர் .
ஆம்ஸ்ட்ராங் அவரின் துப்பாக்கி கையில் இல்லாததால்., 4 ஸ்கெட்ச் திட்டம் போடப்பட்டுள்ளது முதல் ஸ்கெட்ச்சில் தப்பினால் அடுத்து நாட்டு வெடி குண்டு போட்டு கொல்லவும் திட்டம் தீட்டி இருப்பதாக காவல்துறை விசாரணையில் வெளிவந்தது.
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் சமீப காலமாக சிலர் தனிமையில் இருக்க விரும்பியுள்ளார். பவுத்த கொள்கையில் முழு ஈடுபாடு கொண்டவர் என்பதால் அமைதியை நோக்கி பயணிக்க விரும்பி உள்ளார். தனக்கு யார் எதிரி இருக்க போறாங்க..? என அசால்ட்டாக இருந்து இருக்கிறார்.
தன் கூட தொண்டர்கள் வந்து நின்றாலும் அவர்களை திட்டி குடும்பத்தை போய் பாருங்க என சொல்லி இருக்கிறார். திருமணத்துக்கு பின் குடும்பம், குழந்தையோடு நேரம் செலவழித்து இருக்கிறார். அவரை பல நாட்களாக நோட்டமிட்ட கூலிப்படை ஆட்கள் அவரோடு இல்லாத போது இந்த கொலையை செய்து இருக்கிறது.
சாதாரண போராளிகள் ஒரு இடத்தில் ஒன்று கூடினால் அரசுக்கு எதிராக என்ன போராட்டம் நடத்த போகிறார்கள் என்ன நோட்டமிடும் மாநில , ஒன்றிய உளவுத்துறை இத்தனை ரவுடிகள் ஒரே இடத்தில் ஒன்று கூடி ஒரு தேசியக் கட்சியின் மாநில தலைவரை கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்திருக்கிறார்கள் என்றால்..? அது எப்படி காவல்துறைக்கும், உளவுத்துறைக்கும் முன் கூட்டியே தெரியாமல் போயிருக்குமா..? தமிழ்நாட்டில் உள்ள மொத்த ரவுடிகளும் பல நாட்கள் திட்டம் தீட்டியது எப்படி..? The Organised Crime Intelligence Unit ( OCIU ) க்கு தெரியாமல் போனது..? என கேள்விகள் எழுப்பட்டது
பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி அவர்கள் அஞ்சலி செலுத்த வந்த போது இந்த படுகொலை வழக்கை தமிழக அரசு சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால் இங்குள்ள ஊடகங்கள் அவர் பேசிய ஹிந்தியை சரியாக புரிந்து கொள்ளாமல் சிபிஐ விசாரிக்க வேண்டும் என மாயாவதி சொல்லியதாக சில தவறான தகவல்கள் பரபரப்பினர். இவரின் படுகொலையில் பல அரசியல் கட்சிகள் சம்மந்தப்பட்டு உள்ளனர். இதில் ஆளும் வர்க்கமும் சம்மந்தப்பட்டு இருக்குமோ..? என உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை குழுவை அமைத்து விசாரித்தால் உண்மை வெளிவரும் என மாயாவதி கூறியிருந்தார்.
ஆம்ஸ்ட்ராங் அவர்கள் உயிரோடு இருக்கும் வரை அவரின் பேரை கூட உச்சரிக்க பயந்த நபர்கள் இன்று அவர் இல்லை என தெரிந்தவுடன் கட்டப் பஞ்சாயத்துகாரர், ரவுடி, கேங்க்ஸ்டர் என பேசுகிறார்கள். அவர்கள் எல்லாம் அயோக்கியவாதிகள். அவர் எப்படி கொலை செய்யப்பட்டார்..? யாரால் கொலை செய்யப்பட்டார்..? இந்த கொலையின் பின்னணியில் இருப்பவர்கள் யார்..? என்பது விரைவில் நாங்களே கண்டு பிடித்து வெளியிடுவோம் பகுஜன் சமாஜ் கட்சியின் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ