பூப்பறிக்க சென்ற இடத்தில் நடந்த சோகம்…!! பரபரப்பான திருப்பத்தூர்…!!
கல்லுக்குட்டை ஏரியில் அல்லிப்பூ பறிக்க சென்ற ஆண் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி பாலன்வட்டம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் மோகன் (47) இவருக்கு மஞ்சுளா என்ற பெண்ணுடன் திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளன.இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர் கல்லுக்குட்டை ஏரியில் உள்ள அல்லி பூக்களை பறித்து விற்பனை செய்து வருவது வழக்கம் இந்த நிலையில் கடந்த வாரம் அதேபோல அல்லி பூக்களை பறித்து வர கல்லு குட்டை ஏரிக்கு சென்று பூக்களை பறித்துள்ளார் அப்போது அதே ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஒரு வார காலமாக அவருடைய குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் இன்று ஏரியில் சடலமாக கிடந்தார். இந்த நிலையில் வழியாக சென்ற நபர்கள் ஏரியில் இறந்த நிலையில் உடல் இருப்பதாக நாட்றம்பள்ளி போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் நாட்றம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்..
அதன் பின்னர் ஏரியில் உயிரிழந்த கிடந்த மோகனின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பூ பறிக்கச் சென்று ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…