ADVERTISEMENT
செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், ஜாமின் வழக்கு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது, உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமின் வழங்க செந்தில்பாலாஜி தரப்பு கோரிக்கை விடுக்கப்பட்டது.
செந்தில் பாலாஜியின் எம்ஆர்ஐ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஜாமின் மனு தொடர்பான வழக்கை நவம்பர் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.