பிரபல நடிகர் வீட்டு நீச்சல் குளத்தில் காத்திருந்த பேர் அதிர்ச்சி..!!
பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் பேரன் வீட்டு நீச்சல் குளத்தில் முதலை குட்டி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. வீட்டில் முதலையா என நீங்கள் நினைக்கலாம்..? அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
“ஒரு நாள் போதுமா” என்ற நடிப்பால் பலரின் மனதில் இடம் பிடித்தவர் நகைச்சுவை நடிகர் டி.எஸ்.பாலையா. இவரின் பேரன் பாலாஜி தங்கவேல் வீட்டின் நீச்சல் குளத்தில் முதலை குட்டி ஒன்று புகுந்துள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் வசித்து வரும் பாலாஜி தங்கவேல் இன்று அதிகாலை நீச்சல் குளத்தை சுத்தம் செய்வதற்காக நீச்சல் குளத்தில் இறங்கி சுத்தம் செய்து கொண்டு இருக்க அப்பொழுது அந்த தண்ணீரில் எதோ மிதப்பது போல தெரிய.., குளத்தில் இருந்த தண்ணீரை முழுவதுமாக அகற்றி விட்ட பின் அதிர்ந்துள்ளார்.
அந்த நீச்சல் குளத்தின் அடியில் ஒரு ஆமை குட்டியும், ஒரு முதலை குட்டியும் இருந்துள்ளது. முதலையிடம் இருந்து ஆமையை பத்திரப்படுத்தி வனத்துறைக்கு அழைப்பு கொடுத்துள்ளார், பின் அங்கு வந்த வனத்துறையினர் முதலை மற்றும் ஆமையை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொண்டு விட்டுள்ளனர்.
மேலும் இந்த முதலை இப்படி இங்கு வந்துள்ளது என்பது பற்றியும் ஆய்வு செய்து வருகின்றனர்.