ஒன்றிய அரசுக்கு எதிராக திரும்பிய முக்கிய கட்சி..!! பல்வேறு இடங்களில் எழுந்த போராட்டம்..!!
திருப்பூர் மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட செயலாளர் A.P.R.மூர்த்தி தலைமையில் மத்தியில் ஆளும் அரசு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய குடியுரிமை திருத்தச்சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர். கனியமுதன், துரை வளவன், சிறுத்தை வள்ளுவன், உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..