ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரை..!!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற யாத்திரையில் ராகுல் காந்தியுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா, சஞ்சய் ராவத் ஆகியோர் பங்கேற்றனர்.
யாத்திரையின் நடுவே விவசாயிகள் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் குரலாக ஒலிக்கும் எனவும், விவசாயிகளின் நலனை பாதுகாக்க தேவையான கொள்கைகள் வகுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
மேலும், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், பயிர் செய்பவர்கள் பயனடையும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் மறுசீரமைக்கப்படும், ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளால் விளைபொருட்களின் விலை பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.