“உயிரின் உயிரே உயிரின் உயிரே..” ஜோதிகாவிற்காக சூர்யா செய்த செயல்..!!
சினிமாவில் காதல் ஜோடிகளாக நடித்து நிஜத்தில் காதலித்து திருமணம் செய்துக்கொண்டதில் சூர்யா ஜோதிகா இவர்களும் ஒருவர்.. அப்படி காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள்.. தற்போது வரை ரசிகர்களின் Favourite pair என சொல்லலாம்..
இப்படி இருக்கையில் சூர்யா செய்த செயல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது..
வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜோதிகா., அதேபோல் நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானவர் சூர்யா.., இவர்கள் இருவருக்கும் இரண்டாவது படமாக அமைந்தது தான் “பூவெல்லாம் கேட்டுப்பார்..” படம்..
அதன் பின் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் தான்., உயிரிலே கலந்தது., சில்லுனு ஒரு காதல்., மாயவி, காக்க காக்க, பேரழகன்., பல படங்களில் நடித்து காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர்..
இவர்களது திருமணமும் சில சண்டைகளுக்கு பின் தான் நடந்ததாம்.. அதாவது ஜோதிகா வீட்டில் இவர்களது திருமணத்திற்கு ஓகே சொல்லியிருந்தாலும் சூர்யா வீட்டில் அவர்களது அம்மா மட்டுமே சம்மதம் தெரிவித்துள்ளார்..
ஆனால் சிவகுமார் ஜாதி மற்றும் மொழியை காரணம் காட்டி திருமணதிற்கு சம்மதிக்க வில்லை என சொல்லப்படுகிறது.. அதன் பின்னர்., சில்லுனு ஒரு காதல் படத்தில் வருவதை போல நண்பர்கள் உதவியுடன் சூர்யா மற்றும் ஜோதிகா ரெஜிஸ்டர் திருமணம் செய்துக்கொண்ட பின்னரே சிவகுமார்.. சம்மதம் தெரிவித்துள்ளார்..
தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.. இத்தனை ஆண்டுகளாக சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூர்யா ஜோதிகா மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளனர்.. அதற்கு பலரும் கிசு கிசு எழுப்பி வந்த நிலையில் சூர்யா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்..
அவர் கூறியதாவது.., ஜோதிகா பிறந்ததில் இருந்தே மும்பையை சேர்ந்தவர். அவர் உறவினர்கள், உடன் பிறந்தவர்கள், மற்றும் நண்பர்கள் என அனைவரும் அங்கு தான் இருக்கிறார்கள்.. ஆண்களுக்கு எப்படி குடும்பம், நண்பர்கள் இருக்கிறார்களோ. அப்படி தான் பெண்களுக்கும்..
என் மனைவி 27 வருடம் எனக்காகவும், என் குடும்பத்துக்காகவும் சென்னையில் தான் இருந்தார். இதற்கு மேல் அவருடைய சந்தோஷத்தை நான் ஏன் பறிக்க வேண்டும்..? எனக்கு என்ன தேவைப்படுகிறதோ, அவருக்கும் தேவைப்படும். நாம் ஒரு பெண்ணிடமிருந்து அவர் பெற்றோருடனான நேரத்தை ஏன் அபகரிக்கணும்..? மனைவி ஜோதிகாவுடன் மும்பைக்கு குடிபெயர்ந்தது இதற்காக தான்..
தன்னுடைய மனைவிக்காக சென்னையில் வீடு மற்றும் குடும்பத்தை விட்டு சூர்யா சென்று இருப்பது ரசிகர்களிடயே நெகிழிச்சியை ஏற்படுத்தியுள்ளது..