“தங்க மகனுக்காக திறக்கப்பட்ட சிலை..” நெகிழ்ச்சியில் தேமுதிக தொண்டர்கள்..!!
மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான “விஜயகாந்த்” அவர்களின் 72வது பிறந்தநாளை இன்று அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி ரசிகர்களும் தொண்டர்களும் கொண்டாடி வருகின்றனர்..
ஒரு மனிதன் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல இறந்த பின்பும் அவரது பேர் சொல்லும் படி இருந்தால் அவர் சிறந்த தலைவர் மட்டுமின்றி சிறந்த மனிதரும் கூட.., அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் சிலையை அவரது 72வது பிறந்தநாளான இன்று அவரது மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளரும் பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார்..
விஜயகாந்த் சிலை திறப்பு விழாவில் விஜயகாந்தின் மகன்கள், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.