சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அரசு அதிகாரி..! டெல்லி கோர்ட் தீர்ப்பு என்ன..?
டெல்லியை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூத்த அதிகாரி ஒருவர்.., மறைந்த அவரின் நண்பரின் மக்களுக்கு உதவுதாக கூறி 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை இறந்துள்ளார்.., அதன் பின் மாணவி படிக்க முடியாமல் பரிதவித்துள்ளார்.., மாணவிக்கு உதவுவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்று ஒரு வருடமாக பாலியல் வன்கொடுமை சித்திரவதை செய்துள்ளார்.
இதில் மாணவி கர்பமும் அடைந்துள்ளார்.., இது பற்றி பாதிக்கப்பட்ட மாணவி.., அரசு அதிகாரியின் மனைவியிடம் கூறிய போது.. எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மாணவியின் கர்ப்பத்தை கலைப்பதற்கு மருந்துகளை கொடுத்துள்ளார்.., இது பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
இது கொடூர செயல் பற்றி மாணவியின் பெற்றோருக்கு தெரிய வர.., நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.., புகாரை ஏற்ற காவல் துறையினர் அரசு அதிகாரி மீதும் அவரின் மனைவி மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வழக்கு டெல்லி உயர்நீதி மன்றத்திற்கு அனுப்பப்பட்டது.., மாணவியின் நலனை கருத்தில் கொண்ட நீதிபதி பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ ஆலோசனை கொடுத்து.., வன்கொடுமை செய்த அதிகாரியை பதவியில் இருந்து விலக்கி.., 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளனர்.., மேலும் அவருக்கு துணையாக இருந்த மனைவிக்கு 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Discussion about this post