தி கோட் பட பாடல்கள்.. உண்மையை உடைத்த பிரபல பத்திரிக்கையாளர்..!
தி கோட்:
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான கோட் படத்தில் நடித்து வருகிறார்.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள பாடல்களில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகின. அந்த 3 பாடல்களும் ரசிகர்களை பெரிய அளவில் கவரமால் ஏமாற்றத்தை அளித்தது.
யுவன் சங்கர் ராஜா:
பொதுவாக யுவன் இசையமைக்கும் பாடல்கள் அனைத்தும் உச்சத்தை தொடும். அந்த அளவிற்கு அவரது இசைக்கு பல ரசிகர் கூட்டமே உள்ளது என்றே சொல்லலாம். எப்படி அவரது தந்தை இளையராஜா தனது இசையால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை அடித்தாரோ அதே மாதிரி தான் யுவன் இசையும். யுவனின் இசையுடைய பலமே மிகவும் எளிமையாக அனைவரிடமும் கனெக்ட் ஆவதுதான் என அவரது ரசிகர்கள் எப்போதும் கூறுவதுண்டு.
ஏமாற்றம்:
யுவன் ஷங்கர் ராஜா நீண்ட இடைவேளிக்கு பிறகு விஜயுடன் GOAT படத்தில் இணைந்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை விட சற்று அதிகமாகவே பாடல்கள் இருந்து வந்தது. ஆனால் இதுவரை படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியாகின. ஆனால் அத்தனையும் ரசிகர்களுக்கு திருப்தியை அளிக்கவில்லை. இந்தச் சூழலில் யுவன் ஷங்கர் ராஜா குறித்து பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியிருப்பது பலரது கவனத்தை பெற்று வருகிறது.
பத்திரைக்கையாளர் பேட்டி:
அதன்படி பிரபல பத்திரைக்கையாளர் ஒருவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் “GOAT பட பாடல்கள் குறித்து பேசியிருந்தார். அதாவது யுவனின் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
கோட் பட பாடல்களுக்கு கிடைத்திருக்கும் ரெஸ்பான்ஸால் யுவன் ஷங்கர் ராஜா சோகத்தில் உள்ளார். மேலும் ”யுவன் கூறும்போது கடைசியாக வெளியான ஸ்டார் படத்தில் கூட நான் போட்ட இசையை அனைவரும் விரும்பத்தானே செய்தார்கள். இப்படி இருக்கும் போது கோட் திரைப்படத்திற்கு மட்டும் நான் மோசமான டியூனை போடுவேனா? சிச்சுவேஷன் சொல்லி இசையை கேட்கிறார்கள்.
நான் சில ட்யூன்களை அனுப்புகிறேன். அதனை செலெக்ட் செய்யும் இடத்தில் விஜய்தான் இருக்கிறார். அவர் செலெக்ட் செய்த ட்யூன்கள் தான் இவை. என்னை ஃப்ரீயாக விட்டால் நான் சிறப்பாகவே இசையமைத்து கொடுப்பேன்’ என யுவன் கூறியதாக தெரிவித்துள்ளார்.
-பவானி கார்த்திக்