ராயப்பேட்டை பகுதியில் இருந்து நீலாங்கரை பகுதிக்கு வரவழைத்து வட்டி பணத்தை கேட்டு பீர் பாட்டிலால் பணத்தை வாங்கியவர் தலையில் ஓங்கி அடித்து தப்பி ஓட்டம். நீலங்கரை போலீசார் வழக்கு பதிவு இருவரை கைது செய்து மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்
சென்னை இராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பார்த்த சாரதி இவர் இராயப்பேட்டை பகுதியில் வளர்ப்பு மீன் பண்ணை நடத்தி வந்தார். கடந்த 2022 ஆண்டு அன்று காலிதாஸ் , என்பவரிடம் வட்டிக்கு 50,000 ரூபாய் ரொக்கம் வாங்கிய போது வட்டி பிடிப்பு போக ரூபாய் 10,000 கழித்து சுமார் 40,000 ரூபாய் பணத்தை பார்த்தசாரதி பெற்றுள்ளார்.
மேலும் மீன் வளர்ப்பு வியாபாரம் தற்போது சற்று சரிந்து போனதால் பார்த்தசாரதி என்பவர் சரியாக பணத்தை கட்ட முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கந்துவட்டி காளிதாஸ் என்பவர் வட்டிக்கு வட்டி ஸ்பீட் வட்டி ராக்கெட் வட்டி என வட்டிக்கு மேல் வட்டி என தற்போது 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டி தொடர்ந்து மிரட்டல் வந்துள்ளதாகவும், ஆத்திரத்தில் காளிதாஸ் மற்றும் பிரவீன் ,புகழரசன், ராஜேஷ் ,ஆகியவர் ஒன்றிணைந்து நீலங்கரை கடற்கரை சாலையில் பார்த்தசாரதியை வரவழைத்து வட்டி பணம் எப்பொழுது கொடுப்பாய் என மிரட்டல் கொடுத்ததாகவும் மேலும் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் நீலாங்கரை ஒயின் ஷாப்பிற்கு அழைத்துச் சென்று பீர் குடிக்க கூறி வலுக்கட்டாயை படுத்தியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் பார்த்தசாரதி என்பவர் தான் குடிக்க மாட்டேன் என்று கூறியும் மிகவும் காழ்ப்புணர்ச்சியோடு மது அருந்த கோரி தகாத வார்த்தைகள் மூலம் பேசியதாகவும் பின்னர் பீர் பாட்டிலால் பார்த்தசாரதியின் தலை பகுதியில் அடித்தும் அவரை பலமாக தாக்கியும் கும்பல் தப்பி ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் ரத்த காயங்களோடு பார்த்தசாரதி நடந்து வந்தே நீலாங்கரை காவல் நிலையத்தில் என்பவர் புகார் அளித்திருந்தார். பிறகு போலீசாருடன் அழைத்துச் சென்று முதல் சிகிச்சை மருத்துவமனையில் பெற்ற பிறகு நீலாங்கரை காவல் நிலையத்தில் போலீசார் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் கந்துவட்டி கும்பல் எங்கு உள்ளார் என்பது போலீசார்க்கு ரகசிய தகவல் தெரியவந்த போது, வன்னியூர் குப்பம் சேர்ந்த புகழரசன் 19, மேலும் ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ் 25 ஆகிய இருவரை நீலாங்கரை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர் தீவிர விசாரணைக்குப் பின்னர் 4 வழக்குகளில் பதிவு செய்தனர்.
பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் இருவரை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் காளிதாஸ் மற்றும் பிரவீன் ஆகியோரை நீலாங்கரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்