மண்ணாங்கட்டிக்கு கேக் வெட்டிய படக்குக்குழு..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா தற்போது ட்யூட் விக்கி இயக்கத்தில் வெளிவர உள்ள “மண்ணாங்கட்டி” படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
“அன்னபூரணி” படத்தைத் தொடர்ந்து நயன்தாரா தற்போது பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் தான் “மண்ணாங்கட்டி சின்ஸ் 1960”. “ப்ளாக் ஷீப்” யூடியூப் சேனல் புகழ், ட்யூட் விக்கி இயக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களான யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் மற்றும் பலர் நடிக்கவுள்ளார்.., கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய இந்த படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை முடித்துவிட்டது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்னர். இதனை நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இறுதிகட்ட படப் பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து.., தற்போது இந்த படம் எப்போது திரையில் வெளியாகும் என்ற அப்டேட் பற்றியும் படத்தின் இசை வெளியீடு பற்றியும் படக்குழுவினர் எந்த ஒரு அப்டேட்டும் கொடுக்கவில்லை..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..