குயின்ஸ்லாந்து பலகலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றில் பருவநிலை மாற்றம் அண்டார்டிகாவில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த ஆய்வில், காலம் தவறிய பருவநிலை மாற்றத்தை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பூமி தொடர்ந்து வெப்பமாகி வருகிறது, அண்டார்டிகாவில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் மிகவும் குளிரானகாலநிலையில் வாழக்கூடியவை . உரிய கவனம் செலுத்தபடாவிட்டால் அண்டார்டிகாவில் உள்ள பென்குவின் உட்பட பல உயிரினங்கள் அழிந்து போகும் நிலை ஏற்படும். சராசரியாக ஆண்டுக்கு 23 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிட்டால் தான் அண்டார்டிகாவில் உள்ள உயிரினங்களை பாதுகாக்க முடியும் எனவும். அண்டார்டிகாவில் உள்ள 84 சதவிகித நிலவாழ் பறவைகள், உயிரினங்கள் மற்றும் தாவர குழுக்கள் காப்பாற்றப்படும். உலக பருவநிலையை சம நிலையில் இருப்பதற்கு அண்டார்டிகா கண்டம் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆனால்,தற்போது அண்டார்டிகாவில் உள்ள உயிரினங்கள் அழிவை நோக்கி நகர்ந்தும் வருகின்றன.
பருவநிலை மாற்றம் காரணமாக அண்டார்டிகாவில் பனி தொடர்ந்து உருகி வருகிறது. இதனால், அங்கு பனி நிலப்பரப்பு குறைந்து வருகிறது. அனல் காற்று போன்றவை அண்டார்டிகாவில் வீச ஆரம்பித்துள்ளது. இதே போன்ற நிலை தொடர்ந்து நீடித்தால் 2100 ஆம் ஆண்டில் அண்டார்டிகாவில் உள்ள 97 சதவிகித உயிரினங்களின் குறைந்து விடும். குறிப்பாக அண்டார்டிகாவில் உள்ள எம்பெரர் பென்குவின் 2100 ஆம் ஆண்டில் அழிந்து போகும் அபாயம் உள்ளது.மனித குலத்துக்கு விலைமதிப்பற்ற சேவைகளை அண்டார்டிகா வழங்கி வருகிறது.இதனால் அண்டார்டிகாவை காப்பாற்ற தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது