சிறுவன் மீது தாக்கிய மின்சாரம்.. சிறுவனும் பலி காப்பாற்ற சென்ற தாத்தாவும் பலி..
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை, வயலூர் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் திருக்குமரன். இவர் தனது வீட்டில் நேற்று இரவு மின்விசிறியை இயக்க, ப்ளாக் மாற்றியுள்ளார்.
அப்போது எதிர்பாரத விதமாக திருக்குமரனின் மீது மின்சாரம் தாக்கியது. இதனால் அலரி துடித்த திருக்குமரனின் சத்தம் கேட்டு ஒடிவந்த அவரது தாத்தா சீனிவாசன் சிறுவனை காப்பாற்ற முயன்றுள்ளார்.
அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பின்னர் இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். மேலும் திருகுமாரனின் தாய் ரேவதியையும் மின்சாரம் தாக்கிய நிலையில், அவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருகுமரனின் தந்தை துரிதமாக செயல்பட்டு வீட்டின் மெயின் ஸ்விட்சை ஆப் செய்ததால் ரேவதி உயிர்தப்பி உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் , இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தாத்தா மற்றும் பேரன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-பவானி கார்த்திக்