கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த சந்தான ராஜா – ராஜேஸ்வரி தம்பதியினரின் மகன் ராஜமுனீஸ்வர்(11). இவர் தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் கடந்த சில வருடங்களாக சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை பயின்று வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கு நீச்சலிலும் ஆர்வம் உள்ளதை அறிந்து கொண்ட பயிற்சியாளர் திலீப்குமார் சிலம்பத்துடன் சேர்த்து அவருக்கு நீச்சல் பயிற்சியும் தந்தார். இந்த நிலையில் புதுவித சாதனையை படைப்பதற்கு எண்ணிய சிறுவன், நீரில் சிலம்பம் சுழற்றுவதற்கு பயிற்சியில் ஈடுபட்டார். மூன்று மாத பயிற்சி முடிந்த நிலையிலெ ராஜமுனீஸ்வர் இன்று நீச்சல் குளத்தில் இரண்டு மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்ற ஆரம்பித்தார்.
தொடர்ச்சியாக நீச்சல் குளத்தில் ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பங்களை சுழற்றி பார்போரை வியப்பில் ஆழ்த்தினார். அதில் பல்வேறு விதமான நீச்சல் முறைகளை கையாண்டு சாதனையை புரிந்துள்ளார். இவரது சாதனையை Nobel World Record அங்கீகரித்துள்ளது.
சாதனை புரிந்த மாணவருக்கு சிலம்ப பயிற்சியாளர் திலீப்குமார், நீச்சல் பயிற்சியாளர்கள் சிவராஜகோபாலன், அருள் பாண்டி உட்பட அவரது பெற்றோர்கள் நண்பர்கள் உறவினர்கள் பலரும் பாராட்டினர்.