அந்த கடைசி நிமிடம்..! சாதனைக்கு தயாராக இருக்கும் சந்திராயன் 3 – விக்ரம் லேண்டர்..!
இன்று மாலை 6.04 மணிக்கு சந்திரயான் – 3 திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவில் தரையிறங்கும் இந்த செயல்பாடு 15 நிமிடங்கள் வரை நடக்கும், கடைசி 7 நிமிடங்கள் தான் மிக முக்கியமான நிமிடம். அந்த கடைசி நிமிடம் தான் மிகவும் சவால் நிறைந்த ஒன்று., அந்த திக்திக் நிமிடத்தில் விக்ரம் லேண்டர் எப்படி நிலவில் தரையிறங்கும்? என்பது பற்றிய சிலிர்க்க வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை அமெரிக்கா, சீனா முந்தைய சோவியத் யூனியன் ஆகியவை மட்டுமே நிலவில் ஆய்வு நடத்தியுள்ளன, சந்திராயன் 3 நிலவில் தரையிறங்கும் அந்த கடைசி 17 நிமிடம் தான் மிக முக்கியமானவை. சந்திராயன் 3 நிலவில் வெற்றிகரமாக தரை இறங்குவதற்காக பல கோவில்களில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.
அமெரிக்கா வர்ஜிராவிலும் சந்திராயன் 3 திட்டத்திற்காக பிரார்த்தனை நடத்தியுள்ளனர். சந்திராயன்-3 நிலவில் கால் பதிப்பதே இந்தியாவிற்கு மிக பெருமையான ஒன்று..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..