குவைத் நாட்டில் தமிழர்கள் உயிர் இழப்பு..!! முதலமைச்சர் நிதி அறிவிப்பு..!!
குவைத் நாட்டில் புகையின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதி அறிவித்துள்ளார்.
குவைத் நாட்டில் பணியாற்றி வந்த தமிழகத்தை சேர்ந்த முகமது ஜூனைது, முகமது யாசின், மற்றும் கவுல் பாட்ஷா ஆகியோருடன் வெளிமாநில இளைஞர் ஒருவரும் தீ விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் முகமது ஜூனைது, முகமது யாசின், வெளிமாநில இளைஞர் ஆகிய மூவரும் உயிழந்த நிலையில் கவுல் பாட்ஷா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் இத்துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளதாகவும் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 5 லட்சம் ரூபாய் பொது நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.