தமிழக வெற்றிக் கழகம் விருது வழங்கும் விழா நேரலை..!
https://www.youtube.com/live/bcUvJp8nthw?si=vzrBiHNXYQoRSZrh
தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக, முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான தளபதி “விஜய்”, சார்பில் “தளபதி விஜய் கல்வி விருது” வழங்கும் விழா நடைபெற்று கொண்டு இருக்கிறது.
அதில் முதல் இடம் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்கள்களை வழங்கி கெளரவித்து வருகிறார்.
இந்த விழாவானது சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று கொண்டு இருக்கிறது.
விஜய் கல்வி விருதுகள் அதற்காக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,500 மாணவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு 2 கட்டங்களாக பாராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் காலை 10 மணிக்கு விழா அரங்கிற்கு வருகைத் தந்தார். இன்று 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர் பங்கேற்றுள்ளனர்.
இதேபோல, அடுத்த ஜூலை 3ஆம் தேதி விழா நடக்க உள்ளதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவாக பொங்கல், வடை வழங்கப்பட்டது.
மேலும், பாதியிலேயே பொங்கல் தீர்ந்துவிட்டதால் மாணவ மாணவிகள் மற்றும் உடன் வந்த பெற்றோர்கள் சிலருக்கு காலை உணவு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதற்கு, 10 மணிக்கு மதிய உணவு தயாராகிவிடும் என தவெக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
– லோகேஸ்வரி.வெ