இந்தியா டுடே இதழ் நடத்திய கருத்துக்கணிப்பு ஆய்வு ஒன்றில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் போன்ற பல்வேறுதுறைகளில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. இதனை அமைச்சர் மா.சுப்புரமணியன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"INDIA TODAY"இதழ்நடத்தியஆய்வில்ஆளுமை, மருத்துவம்,பொருளாதாரம்,கல்வி,உள்ளிட்ட பல்வேறுபிரிவுகளில்சிறப்பாகசெயல்பட்ட பெரியமாநிலங்களில்2022ஆம்ஆண்டிற்கான "சிறந்தசெயல்திறன்"கொண்டமாநிலமாக தமிழ்நாடுமுதலிடம்பிடித்துள்ளது.மாண்புமிகு முதல்வர்அவர்களின்ஆளுமைத்திறனுக்கான அங்கீகாரம். @IndiaToday pic.twitter.com/2OdyvxgARf
— Subramanian.Ma (@Subramanian_ma) December 16, 2022
இந்தியா டுடே நாளிதழ் பெரும் மாநிலங்கள் இடையே ஆளுமை, மருத்துவம், பொருளாதாரம், சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் அதிக செயல்திறன் கொண்ட மாநிலத்துக்கான கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது அந்த கருத்து கணிப்பின் படி சிறந்த செயல்திறன் மாநிலமாக தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது. அதை தொடர்ந்து இமாச்சல பிரதேசம், கேரளா, குஜராத், பஞ்சாப் என்று அந்த பட்டியலில் அடுத்ததடுத்தாக மாநிலங்கள் வகைப்படுத்தபட்டுள்ளது.
இதை தொடர்ந்து தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார், அதில் “INDIA TODAY” இதழ் நடத்திய ஆய்வில் ஆளுமை, மருத்துவம், பொருளாதாரம், கல்வி, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட பெரிய மாநிலங்களில் 2022ஆம் ஆண்டிற்கான “சிறந்த செயல்திறன்” கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. மாண்புமிகு முதல்வர் அவர்களின் ஆளுமைத்திறனுக்கான அங்கீகாரம். என்று தமிழக முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்துள்ளார்.
Discussion about this post