பல வருடங்களாகவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! மனம் திறந்த நடிகர் பிரபு..!!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாளான இன்று சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அவரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சர்கள் மடுமின்றி அமைச்சர்கள் துரைமுருகன், சாமிநாதன், மற்றும் சென்னை மேயர் பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நடிகர் பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு ஆகியோர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
மணிமண்டபத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நடிகர் பிரபு வரவேற்றார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் பிரபு :
பல வருடங்களாகவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து மரியாதை செலுத்தி வருகிறார். அதற்கு என் தந்தை மீது உள்ள பாசம் தான் காரணம். கருணாநிதி , எம்ஜிஆர், சிவாஜி கணேசன் என மூவரின் சிலையும் ஒரே இடத்தில் இருப்பது அவர்களின் ஒற்றுமையை வெளிபடுத்துகிறது…