விஜயின் நாயகியை தட்டித்தூக்கிய சூர்யா..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் உருவாகும் கங்குவா என்ற படத்தில் நடித்துள்ளார். வரலாற்று கதையம் சத்துடன் உருவாகும் இந்த படத்தில், பல கெட்டப்களில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், 10 மொழிகளில் இப்படத்தை டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
இந்த படத்திற்கு பிறகு, சுதா கொங்காராவின் படத்தில் சூர்யா நடிக்க இருந்தார். ஆனால் சில பிரச்சனைகளின் காரணமாக அந்த புராஜெக்ட் டேக் ஆஃப் ஆகவில்லை. இதன் காரணமாக தனது அடுத்த படத்தின் வாய்ப்பை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்க்கு சூர்யா வழங்கியுள்ளார். சூர்யாவின் 44-வது படமாக உருவாக உள்ள இப்படத்தில் பல்வேறு வேற்று மொழி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் கசிந்துள்ளது. அதாவது, இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில், முதன்முறையாக இருவரும் இணையும் படமாக அது இருக்கும். இதற்கு முன்னர், ஜீவாவின் முகமூடி, விஜயின் பீஸ்ட் ஆகிய படங்களில் நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..