அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் நிறுத்தம்..! கோர்ட்டில் ஆளுநர் கடிதம்..!!
அமைச்சரவையில் இருக்கும் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற உத்தரவை தமிழக ஆளுநர் எழுதிய கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதி மன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என வழக்கறிஞரும் மற்றும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி என்பவர் தாக்கல் செய்த வழக்கு ஜூலை 7ம் தேதி வரை ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
இந்த இடைப்பட்ட நாள்களில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஜூன் 29ம் தேதி மாலை உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவை நிறுத்த வேண்டும் என அடுத்த சில மணி நேரத்தில் தமிழக அரசுக்கு கடிதமும் எழுதியிருக்கிறார்.
இந்நிலையில் எம்.எல்.ரவி தாக்கல் செய்து இருக்கும் புதிய மனுவில், அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க உத்தரவை நிறுத்தி வைத்திருக்கும் தமிழக அரசு ஆளுநர் ரவியின் கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
ஆளுநர் எடுக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது என்று மனு ஒன்றை எழுதியுள்ளார்.
இந்த மனு அடுத்த வாரமே விசாரணைக்கு வந்து விடுமா என்று பலரும் எதிர் பார்த்து வருகின்றனர்.
Discussion about this post